7000 Mah பேட்டரி, 64 மெகா பிக்ஸல் கேமரா.. வெளியானது சாம்சங் M51! விலை மற்றும் முழு விபரங்கள் உள்ளே!!

Default Image

ஹை பட்ஜேட் முதல் லோ பட்ஜேட் முதல் தரமான போன்களை வெளியிட்டு வரும் சாம்சங் நிறுவனம், தற்பொழுது தனது சாம்சங் M51 மொபைலை வெளியிட்டுள்ளது.

கொரியன் ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், சமீபத்தில் தனது சாம்சங் M31 வெளியிட்டது. அந்த ரக மாடல்கள் வெளியாகி, இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது சாம்சங் M51-ஐ அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு பேசுபொருளாக இருப்பது என்னவென்றால், இந்த மொபைலில் 7000 Mah செயல்திறன் கொண்ட பேட்டரி இருப்பது.

மேலும் இந்த M51, ரியல்மி X2, போக்கோ X2, ஆகிய மொபலைக்கு காம்படிட்டராக கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் டூயல் 4 ஜி VoLTE, வைஃபை 802.11, புளூடூத் 5 , ஜிபிஎஸ் டைப்-சி போர்ட், 3.5 mm ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளன. மேலும், இதில் சைட் மவுண்ட்டட் பிங்கர் ப்ரின்ட் மற்றும் பேஸ் லாக் வசதி உள்ளது.

சாம்சங் M51 விபரங்கள்:

டிஸ்பிலே:

சாம்சங் M51 மொபைலில் 6.7 அங்குல FHD + Super AMOLED plus Infinity O டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே, 60Hz Refreshing rate -ஐ கொண்டது. மேலும், இது பிளாஸ்டிக் ஐ போல “கிளாஸ்டிக்” எனப்படும் ஒருவகையான பிளாஸ்டிக்கால் பில்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் Aspect ratio, 20:9 விகிதத்தை கொண்டுள்ளது. மேலும் இதில் கார்னரின்க் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டது.

கேமரா:

சாம்சங் M51-ல் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் உள்ளது. மேலும், 12 மெகாபிக்சல் வைட் கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 5 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 10X வரை ஜூம் செய்து போட்டோ எடுக்கலாம். செல்பி கேமராவை பொறுத்தளவில், 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இதில் LED Flash, AI கேமரா உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரியை பொறுத்தளவில், 7000 Mah செயல்திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரி உள்ளது. அதனை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இதன் சார்ஜிங் டைம், 2 மணிநேரம். மேலும், இதில் ரிவர்ஸ் சார்ஜிங்கும் செய்யலாம். அதாவது, இந்த மொபைலை வைத்து வேரோரு மொபைலுக்கு சார்ஜ் செய்யலாம். (பவர் பேங்க் போல)

OS மற்றும் பெர்பாமன்ஸ்:

சாம்சங் M51, ஆண்ட்ராய்டு 10 ஓன் UI 2.1 os-ல் இயங்குகிறது. இதில் சாம்சங்கின் எஸ்சினோஸ் ப்ராசஸார் இல்லாமல், குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 730-G பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2.2 octa core ப்ராசஸார் மற்றும் LPDDR4X ரக ரேம் வசதி உள்ளது. கேமிங்கை பொறுத்தளவில், இதில் அட்ரினோ 618 GPU மற்றும் AI கேம் பூஸ்டர் வசதி உள்ளது.

சவுண்ட்:

ஸ்பீக்கரை பொறுத்தளவில், இது சிங்கிள் ஸ்பீக்கரை கொண்டுள்ளது. இதில் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது. படம், பாட்டு கேக்கும்போது இதன் சவுண்ட் நன்றாக இருக்கிறது. ஆனால் கேம் (குறிப்பாக பப்ஜி, பிரீபயர், கால் ஆப் டியுட்டி) உள்ளிட்ட கேம்களை விளையாடும்போது அந்தளவு சவுண்ட் இல்லை.

ரேம் மற்றும் விலை:

சாம்சங் M51 (6 ஜிபி + 128 ஜிபி) – ரூ.24,999
சாம்சங் M51 (8 ஜிபி + 128 ஜிபி) – ரூ.26,999

இந்த சாம்சங் M51, வரும் செப்டம்பர் மாதம் 18- ம் தேதி அமேசான் வலைத்தளத்தில் நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori