உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் சோதனை கட்டணம் ரூ .1,600 ஆக நிர்ணயம்.!

Default Image

உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் சோதனை கட்டணத்தை தற்போது ரூ .1,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சோதனைக்கு பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கருவிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலை குறைந்து வருவதால், உத்தரபிரதேசத்தில் அனைத்து தனியார்  ஆய்வகங்களில் கொரோனா சோதனை கட்டணத்தை ரூ .2,500-லிருந்து ரூ .1,600 ஆக குறைத்துள்ளது.

கொரோனா சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக் கருவிகளின் விலைகள் குறைந்துவிட்டன. எனவே, சோதனையின் விலை குறித்த ஏப்ரல் உத்தரவு திருத்தப்பட்டுள்ளது. அதன் படி, தற்போது சோதனையின் அதிகபட்ச விலை ரூ .1,600 ஆக இருக்கும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் அமித்அமித் மோகன் பிரசாத் தெரிவித்தார். இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அறிக்கையின் படி, கொரோனா தொற்றை கண்டறியும் சோதனையின் விலை ரூ .1,600 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொற்றுநோய் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் அவர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையை குறைப்பதன் நோக்கம் அதிகபட்ச மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா சோதனையின் விலை குறைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். தனியார் ஆய்வகங்கள் முதலில் ஆர்டிபிசிஆர் வழியாக சோதனைக்கு அனுமதிக்கப்பட்டபோது, ​​ஒவ்வொரு சோதனைக்கும் கட்டணம் ரூ .4,500 ஆக இருந்தது, பின்னர் ஏப்ரல் மாதத்தில் ரூ .2,500 ஆக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்