நடராசன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல்.!

Default Image

கே.எம். நடராசன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.எம். நடராசன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு, வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பை, அப்போதைய எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு வழங்கியது என்பது குறிப்பிடப்படுகிறது. கே.எம். நடராசனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நீதிபதி நடராசன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதிவில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரும், சமுதாய உணர்வு மிக்கவருமான நடராசன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவர், செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவர் போன்ற பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் என்று தெரிவித்துள்ளார்.  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாராட்டைப் பெற்று, வாழும்போதே வரலாறாக வாழ்ந்த கே.எம். நடராசன் மறைவு இச்சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து நடராசன் மறைவிற்கு முக ஸ்டாலின் இரங்கல் செய்து வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் உயர்நீதிமன்றம் நீதிபதி கே.எம்.நடராசன் அவர்களின் திடீர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்