இறப்பு விகிதத்தை 1% ஆக குறைக்க நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர்!
கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபாதை மேம்பால பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொரோனா எதிர்ப்பு மருந்தான கோவிட் ஷீல்ட் பரிசோதனை இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளது. நாகை கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரித்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அந்த மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவரைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1.68 சதவீதமாக குறைந்து உள்ள கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதமாக கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.