ரவுடி சங்கர் வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
அயனாவரம் ரவுடி சங்கர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அயனாவரத்தில் உள்ள ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடந்த ஆகஸ்ட -21-ஆம் தேதி முயன்றனர். அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் .என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி ஷங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் இருந்தது. இதற்கிடையில் ரவுடி வெட்டியதாக கூறப்படும் முதல்நிலை காவலர் முபாரக் உள்ளிட்ட 4 காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கை சென்னை போலீசாரின் பரிந்துரையை ஏற்று வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
இதனிடையே சங்கர் உடலை மறு பிரேத பரிசோதனை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போழுது, காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதியப்பட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பின் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜன் மீது கொலை வழக்கு பதிய வேண்டுமா? என்று விசாரணையின் முடிவில் சிபிசிஐடி முடிவெடுக்கும் என்று கூறி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம்.