புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டடுபிடிப்பு.!

Default Image

ஜெய்பூரில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஜெய்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,இது உலகில் முதல் நோய் என்றனர்.

அந்த குழந்தைக்கு பாம்பே நோய் மற்றும் முதுகெலும்பு தசைநார் பாதிப்பு  இருப்பது கண்டறியப்பட்டதாக ஜே.கே.லோன் மருத்துவமனையின் ஒரு மருத்துவர் நேற்று தெரிவித்தார். பாம்பே நோய் வளர்சிதை மாற்றத்தின் ஒரு அரிதான பிறப்பு பிழை என்றாலும், எஸ்.எம்.ஏ என்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு கோளாறு ஆகும்.

இந்நிலையில், புதிதாக பிறந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் படி,  ஒரு குழந்தைக்கு இரண்டு அரிய கோளாறுகளை கொண்டிருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு  மருத்துவ அறிக்கையில் அத்தகைய நோய் குறித்து எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சையின்றி உயிர் வாழ்ந்ததில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்