சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது நியாயமில்லை – கனிமொழி

Default Image

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் மட்டும் 13 சிறப்பு ரயில்கள் இயக்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,மேலும் 3 சிறப்பு ரயில்கள் வரும் 12 ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. இதில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை தற்போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது.

தற்போது, ஊரடங்கு காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்