காதல் மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை..!
கோவை பேரூர் எடுத்து சென்னுரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் இவர் அப்பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார. இவரும் மஞ்சுளா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர், இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் 7ம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கோவிந்தராஜன் மற்றும் மஞ்சுளாவை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மேலும் அப்பொழுது மஞ்சுளாவின் பெற்றோர் மஞ்சுளாவின் மனதை மாற்றினர்.
இந்நிலையில் தனது கணவருடன் வாழ விருப்பமில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு பெற்றோருடன் மஞ்சுளா சென்றுள்ளார். இதனால் முற்றிலும் மறைந்து மனமுடைந்த வேதனையில் கோவிந்தராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இதனை தொடர்ந்து மஞ்சுளாவின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோவிந்தராஜன் பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.