கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ கட்டு தீயில் மேலும் மூவர் உயிரிழப்பு!

Default Image

கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ கட்டு தீயில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ காட்டில் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ கடந்த மூன்று வாரங்களாக எரிந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக அளவில் காற்று வீசிக் கொண்டே இருப்பதால் இதுவரை 25 மயில் பாதை மலைப்பகுதி மற்றும் வலைதளங்கள் வழியாக தீ பரவி விரிந்து கொண்டே செல்கிறது. வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீயாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேரழிவிற்கு உண்டான பாரடைஸ் நகரத்தை கூட தற்போது பெரும் தீ பிடித்துள்ளது.

இந்நிலையில் வனப்பகுதியின் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்பட்ட தீயில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், 3600 க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெளியேற்றப்பட்ட நபர்களில் 12 பேரை இன்னும் காணவில்லை எனவும்  கவுண்டி ஷெரிப் என்பவரின் அலுவலகத்தில் காணாமல் போன 85 நபர்கள் குறித்த எந்த விவரமும் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்