இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது ரபேல் போர் விமானங்கள்

Default Image

இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது ரபேல் போர் விமானங்கள்.

கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுனது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த 36 விமானங்களில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜையும் செய்தார்.10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே இருந்தது. மீதமுள்ள 5 விமானங்கள் பிரான்சில் இருந்து  ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தது.

இந்நிலையில் அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சிக்குப் பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்