உலகளவில் 2.80 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
உலகளவில் கொரோனா பாதிப்பு 2.80 கோடியாக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு இன்னும் தனது வீரியத்தை குறைத்துக்கொள்ளவில்லை. இதுவரை உலகளவில் 28,022,276 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 908,000 பேர் உயிரிழந்துள்ளனர், 20,100,662 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 286,548 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6,227 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,015,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.