மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 9 மணிவரை நீட்டிப்பு- மெட்ரோ நிர்வாகம்!
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள், காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நீடிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக, செப். 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவுள்ளது.
5 மாதங்களுக்கு பின், மத்திய மற்றும் மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, சென்னையில் காலை 7 முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை நேரத்தை மேலும் நீட்டிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்த நிலையில், மேலும் ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.
அதன்படி மெட்ரோ ரயில் சேவைகள், காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.