சிவசேனா கட்சியின் மிரட்டலையும் தாண்டி மும்பைக்கு வந்தடைந்தார் கங்கனா ரனாவத்!

Default Image

சிவசேனா கட்சியின் மிரட்டலையும் தாண்டி மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பைக்கு வந்தடைந்தார், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக உணருவதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , கங்கனாவின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பயமாக இருந்தால் மும்பை மாநகரத்துக்கு வர வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் கங்கனா ரனாவத் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “நான் மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் பயமுறுத்தி வருகின்றனர். வருகின்ற 9 ஆம் தேதி நான் மும்பைக்கு வரவுள்ளேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில், கங்கனா, செப்டம்பர் 9-ம் தேதி அன்று நான் மும்பைக்கு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். மும்பை விமான நிலையத்தை தாம் அடையும் நேரத்தைப் பகிருவதாகவும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சிவசேனா கட்சியின் மிரட்டலையும் தாண்டி மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் நடிகை கங்கனா ரனாவத், மும்பைக்கு வந்தடைந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவசேனா கட்சியினர், விமான நிலையத்தில் கருப்பு கோடி ஏந்தி போரட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுன்றி, இத்தகைய பாதுகாப்பு பெரும் ஒரே பாலிவுட் பிரபலம் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்