பிரதமர் பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர் தனது மனைவியுடன் பாஜகவில் இணைந்தார்.!

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன் தனது மனைவி பாண்டீஸ்வரியுடன் பாஜகவில் இணைந்தனர்.
மதுரையில் சலூன் கடை நடத்தி வந்த மோகன் என்பவர், தனது மகள் நேத்ராவின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை, அப்பகுதியில் வசிக்கும் 1,000க்கும் மேற்பட்டோருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சிறப்பு தொகுப்பை இந்த கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் வழங்கியுள்ளார். இதனை மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சலூன் கடை உரிமையாளர் மோகன் தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவு செய்துள்ளார். இவருக்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்திருந்தார்.
பின்னர், பாஜக தலைவர் எல்.முருகன், மோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மோகன் மகள் நேத்ராவை UNADAP-வின் ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவித்து, அவருடைய எதிர்காலத்திற்காக ரூ.1 லட்ச ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளனர். அத்துடன், மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் மோகனை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை சலூன் கடைக்காரர் மோகன் தனது மனைவி பாண்டீஸ்வரியுடன், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்தது ஏன்? என்று மதுரை சலூன்கடைக்காரர் மோகன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாஜகவில் இணைந்துளேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025