ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இரண்டு பயங்கரவாதிகள் கைது !
ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாதை அருகே ஜம்முவிலிருந்து வந்த லாரியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பயங்கரவாதிகளை நேற்று இரவு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.