#BreakingNews : திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா நியமனம்
திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திமுகவில் துணை பொதுச்செயலாளராக 3 பேர் உள்ளனர். ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்படுவதாக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் திமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 5ஆக உயர்ந்துள்ளது.