“ஒகேனக்கலில் அடுத்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!”- மாவட்ட ஆட்சியர் மலர்விழி

Default Image

ஒகேனக்கலில் அடுத்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கில், தமிழக அரசு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது.

மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு வெளியூர் பயணிகள், இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு செல்ல, இ-பாஸ் எடுக்கவேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். அந்தவகையில், அடுத்த வாரம் முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress
rain news today