நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு.!
நீட் தேர்வை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு முதன்மை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளரான தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது . அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 600 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் ஜேஇஇ தேர்வை எழுதினர். அதனையடுத்து வரும் 13ஆம் தேதி முதல் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கொரோனா அச்சம் காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளரான தீரஜ்குமார், நீட் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்யும் வகையில் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு தேர்வை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.