தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அந்த வகையில் சேலம்,தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.