“ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்!- அதிபர் ட்ரம்ப்

கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வதந்திகளை பரப்பி வருவதாகவும், அதற்காக இருவரும் மன்னிப்பு கேட்கவேண்டும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.
மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.
அந்தவகையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வதந்திகளை பரப்பி வருவதாகவும், அதற்காக அவர்கள் இருவரும் மன்னனிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025