பயங்கர ஆயுதங்களுடன் சீன ராணுவம் ..புகைப்படம் வெளியானது.!

Default Image

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால்  எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்து இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள ரெசாங்-லா மலைப்பாதையின் முக்பாரி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை சீனப் படையினர் ஈட்டிகள், கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்ல முயன்றதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன

இதுபற்றி ராணுவம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், லடாக்கின் கிழக்கு  எல்லை கோட்டு பகுதியில் சீன வீரர்கள் குவிக்கப்பட்டு, அவர்கள் தங்களது முதுகு பகுதியில் துப்பாக்கிகளை தொங்க விட்டுள்ளனர். அதனுடன் பயங்கர ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.

ஜூன் 15 ம் தேதி கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களின் போது சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்கள், ஆணி பதித்த குச்சிகள், இரும்பு கம்பிகள் மூலம் கொடூரமான தாக்குதலை நடத்தியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

45 வருட இடைவெளிக்குப் பிறகு எல்.ஐ.சி பகுதியில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டில், எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அதன் பின்னர் தற்போது தான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. எல்லையை தாண்டி  சென்று  எந்த துப்பாக்கியையும் பயன்படுத்தவில்லை என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்