“டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படத்தில் மகிழ்ச்சி!”- முதல்வர்
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30 வரை மத்திய அரசு நீடித்துள்ளது. இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. குறிப்பாக, மெட்ரோ ரயில் சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்காரணமாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில், 5 மாத இடைவெளிக்கு பிறகு, மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும், மெட்ரோ சேவைகள் நேற்று தொடங்கியதில் தாம் மகிழ்ச்சி அடைகிறதாகவும், அதற்காக டெல்லி மெட்ரோ நல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது என கூறினார். மேலும், மெட்ரோ பயணத்தின் போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் பயணிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, கொரோனா பரவல் காரணமாக, 169 நாட்களுக்கு பின், அன்லாக் 4- ன் ஒரு பகுதியாக, மெட்ரோ சேவைகள் நேற்று காலை முதல் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரயிலில் பயணிகள் இருக்கைகளில் அமர அல்லது நிற்க, ஒரு மீட்டர் இடைவெளியைப் பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.