“மாற்றத்தை சிந்திக்கும் தலைவன் .! ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.!
ரஜினியின் அரசியல் வருகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.கொரோனா படத்தின் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவரின் அரசியல் வருகைக்காக ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் நவம்பரில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் அரசியலில் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே நடிகர் ராகவா லாரன்ஸூம் நவம்பரில் நல்ல சேதி வரும் என்றும், குருவான ரஜினியின் ஆன்மீக அரசியலில் செல்ல தயார் என்றும் கூறியதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ரஜினியின் வருகை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதில் ‘மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்தால்.. அரசியல் மாற்றம்.! ஆட்சி மாற்றம்! இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை’ என்ற வாசகங்களுடன் ஒட்டியுள்ள போஸ்ட்ர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.