பாஜக என்னைத் தாக்குவதற்கு போலியான கணக்கிலிருந்து ட்வீட் செய்கிறது – சுப்பிரமணியன் சுவாமி.!
பாஜக தகவல் தொழில்நுட்ப அணியில் இருப்பவர்களில் சிலர் என்னைத் தாக்குவதற்கு போலியான கணக்கிலிருந்து ட்வீட் செய்கின்றனர் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அமித் மால்வியா என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இயங்கும் பணியாளர்கள் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி அவரது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகவும் மோசமாக உள்ளது.
அதில் பணிபுரியும் உறுப்பினர்கள் சிலர் போலியான கணக்கு தொடங்கி, அதைக் கொண்டு என் மீது தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இதற்கு என்னைப் பின் தொடரும் கோபக்கார நபர்கள் யாராவது பதிலடி கொடுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்யும் தவறுக்கு கட்சி எப்படி பொறுப்பேற்காதோ, அதேபோலத் தான் இதுவும் என்று கூறி பதிவிட்டுள்ளார்.
The BJP IT cell has gone rogue. Some of its members are putting out fake ID tweets to make personal attacks on me. If my angered followers make counter personal attacks I cannot be held resonsible just as BJP cannot be held respinsible for the rogue IT cell of the party
— Subramanian Swamy (@Swamy39) September 7, 2020