அகமதாபாத்தை “மினி பாகிஸ்தான்” என அழைத்த விவகாரம்: சஞ்சய் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்!
அகமதாபாத்தை “மினி பாகிஸ்தான்” என கூறியதற்கு குஜராத் மாநில மக்களிடமும், அகமதாபாத் மக்களிடமும் சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் விசாரித்து வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது.
இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை கங்கணா ராவத் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக உணருவதாக தெரிவித்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த கருத்து குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , கங்கனாவின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். அதுமட்டுமின்றி, மும்பையை “மினி பாகிஸ்தான் என கூறிய கங்கணா ராவத்துக்கு அகமதாபாத்தை “மினி பாகிஸ்தான்” என கூறுவதற்கு தைரியம் இருக்கிறதா? என கேட்டார்.
இவரின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில்,
அகமதாபாத் நகரை மினி பாகிஸ்தான் என கூறியதற்கு குஜராத் மாநில மக்களிடமும், அகமதாபாத் மக்களிடமும் சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என குஜராத் மாநில பாஜக கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாரத் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.