கோவையில் 2 பேர் உயிரிழப்பு ! ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

Default Image

கோவையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் போரூரில்  செட்டி வீதியில் உள்ள  2 அடுக்குமாடி வீடு கனமழையால் இடிந்து விழுந்ததை அடுத்து அருகிலுள்ள ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் சிக்கியதாக கூறப்பட்டதை அடுத்து இடிபாடுகளில் சிக்கி ஸ்வேதா (27) மற்றும் கோபால்சாமி (70) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதனையடுத்து விடிய விடிய மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 6 வயது சிறுவன் உட்பட 4 பேரை காயங்களுடன் மீட்டெடுத்தனர்.

இந்நிலையில் கோவையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala