கல்விக் கொள்கை: மாநிலங்களின் கருத்து திறந்த மனதுடன் கேட்கப்படும் – பிரதமர் மோடி உரை.!

Default Image

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துக்கள்  கேட்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மாநில ஆளுநர்கள் மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுள்ளார்.

மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அவரது உரையில், மாநிலங்களின் கருத்துக்கள், சந்தேகங்கள் அனைத்துக்கும் தீர்வு அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டியது நம் அனைவரின் கூட்டு பொறுப்பு என்றும் கூறியுள்ளார். கல்வி கொள்கையில் அரசின் பங்களிப்பு முக்கியமானது. கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

கொள்கை வகிப்பதில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்வி கொள்கையை அனைவரும் ஏற்று கொண்டுள்ளனர். கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தற்போதைய சூழலில் அவசியமானது. படிப்பதைவிட கற்றுக்கொள்வதற்கு புதிய தேசிய உதவி செய்கிறது. மனது, மூளையை எது சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே சிறந்த அறிவு. கடந்த 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த கல்வி கொள்கையில் உள்ளது.

மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. கல்வி தனக்குத்தானே பெருமைக்குரியதாக அமைய வேண்டும். எவ்வித குறைபாடு, அழுத்தமோ இல்லாமல் கற்பதற்கு புதிய தேசிய கல்வி கொள்கையில் வழி செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கல்வியில் சிறந்தவர்களாக அவர்களை மாற்றும். இந்த கொள்கையின் மற்றோரு வடிவம் ஆன்லைன் கல்வி. அனைவரும் ஒன்றிணைந்து முழுமையான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும்.

இந்த கல்வி கொள்கை தேசத்தின் கொள்கை. 30 ஆண்டுகளில் ஏற்படும் மாற்றத்தை கண்கூட காண முடியும். நாட்டின் பாதுகாப்புக்கான கொள்கையை போன்றதே புதிய கல்வி கொள்கை. தொழில்நுட்ப வளர்ச்சி நகரம் மட்டுமின்றி ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளது. நாட்டில் உள்ள பல இளைஞர்கள் புதிய செயலிகளை உருவாக்கி உள்ளனர். ஏழை குடும்பத்தில் உள்ள இளைஞர்களும் இந்த தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள முடியும். அனைத்து கல்வி முறைகளும் முறைப்படுத்தப்பட்ட உள்ளன என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Rohini (13) (1)
TN Weather Update
heavy rain
Mumbai Taj Attack
Southwest Bay of Bengal
75th Constitution Day