ஓரிரு நாட்களில் “COVISHIELD ‘ தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை துவக்கம்-அமைச்சர் விஜயபாஸ்கர் .!
தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா தடுப்பூசியான COVISHIELD-ன் 3வது கட்ட பரிசோதனை துவங்கவுள்ளதாக சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது.
அந்த வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனேவின் சீரம் பல்கலைக்கழகமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியான COVISHIELD என்பதை உருவாக்கியுள்ளனர். அதற்கான 3வது கட்ட பரிசோதனையை தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்துள்ளார். மேலும் இந்த 3வது கட்ட பரிசோதனையில் COVISHIELD என்ற கொரோனா தடுப்பூசியை 180 பேரின் உடலில் செலுத்தி சோதனை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.