தமிழக்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழக்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிள் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமுட்ட்டதுடன் காணப்படும் என்றும் சென்னையின் சில பகுதியில் லேசான முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், கேரளா, கர்நாடக கடல்பகுதிகளில் அதிகளவில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.