தனியார் பள்ளிகள் குறித்த புகார்களுக்கு பிரத்யேக இணையதள வசதி- அமைச்சர் செங்கோட்டையன்.!

Default Image

தனியார் பள்ளிகள் குறித்த குற்றச்சாட்டுகளை தெரிவிக்க பிரத்யேக இணையதள வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் தனியார் பள்ளிகள் குறித்த குற்றச்சாட்டுகளை கூறி புகார் செய்வதற்காக பிரத்யேக இணையதள வசதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர் ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள மொடச்சூர் கீரிப்பள்ளம் கழிவுநீர் ஓடையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

முதன்மை கல்வி அலுவலர் மூலம் தனியார் பள்ளிகளில் 40% மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் , கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் பள்ளிகள் குறித்த புகார்களுக்கு பிரத்யேக இணையதள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் என்றும் தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றால், அவர்கள் அனைவரும் அதுகுறித்து கோரிக்கையாக வைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், தற்போது பள்ளிகள் திறப்பது குறித்த எந்த சாத்தியமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் கூடுதலாக உள்ள 7,500 ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்ட பின்னர் தனியார் பள்ளிகளில் வேலையில்லாமல் உள்ள ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணிக்கு அமர்த்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்