#CSK வீரர்கள் இணைந்து பயிற்சி செய்தது சந்தோஷத்தை கொடுக்கிறது -வாட்சன்..!
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் விரைவில் வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்க 8 அணியின் வீரர்கள் மற்றும் அமீரகம் சென்றடைந்து, கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர். பின்னர் சில அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர் வாட்சன் தனது ட்வீட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் சென்னை சூப்பர் கிங் வீரர்களுடன் மீண்டும் பயிற்சி செய்தது உற்சாகம் அளிக்கிறது, மேலும் கொஞ்சம் கரை படிந்து இருந்தாலும் அது மறைந்து போக அதிக நாட்கள் இருக்காது என்று வாட்சன் அந்த பதிவில் கூறியுள்ளார்.
How exciting it was to be back with all of my @ChennaiIPL mates for our first training session!!! It was so much fun. There was a little rust that won’t take long to go. ???????????????????? #whistlepodu #ipl pic.twitter.com/mErFh9Aqw5
— Shane Watson (@ShaneRWatson33) September 5, 2020