#Breaking: நாடு முழுவதும் மேலும் 80 சிறப்பு ரயிகள் இயக்கப்படும்!- ரயில்வே நிர்வாகம்

Default Image

இந்தியாவில் கூடுதலாக மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், மத்திய அரசு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி வழங்கிய நிலையில், ஒருசில மாநிலங்களில் பயணிகள் ரயில் சேவைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சிறப்பு ரயில்களை ரயில்வே வாரியம் இயக்கி வருகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்தார். அதற்கான முன்பதிவு, வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்