சத்தீஸ்கர் அருகே லாரி மீது பஸ் மோதி 7 பேர் உயிரிழப்பு..!
ஒடிசாவின் கஞ்சாமில் பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு தொழிலாளர்கள் கொண்டு செல்லும் பஸ் ஒன்று சத்தீஸ்கர் ராய்ப்பூரில் உள்ள செரிகெடி என்ற இடத்தில் இன்று காலை லாரி மீது மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார், மேலும் தேவையான உதவிகளை வழங்க உடனடியாக ராய்ப்பூருக்கு செல்லுமாறு அமைச்சர் சுசாந்தா சிங்கிற்கு முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.