எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்
எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார் .இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது அவரிடம் , கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்களின் பேச்சை ஏற்கமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,”கூட்டணி பற்றி அதிமுக அமைச்சர்கள் பேசக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கட்டளையிட முடியாது”. கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.