புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசனை – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

Default Image

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசனையில்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்க பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், ஆளுநர் மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் செப்டம்பர் 7-ஆம் தேதி புதிய கல்விக்கொள்கை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நடத்தும் ஆலோசனையில் தமிழகம் சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்