ஹரியானா :75 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி .. 2 ஹோட்டல்கள் சீல் வைப்பு

Default Image

ஹரியானாவில் 75 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 2 ஹோட்டல்கள் சீல் வைக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து 50 கி. மீ தூரத்தில் ஹரியானாவின் முர்தாலில் உள்ள அம்ரிக் – சுக்தேவி தபாவில்(ஹோட்டல்) உள்ள 65 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த ஹோட்டல் வியாழக்கிழமை அன்று சீல் வைக்கப்பட்டது. அதே போன்று மற்றொரு ஹோட்டலில் பணிபுரியும் 10 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹோட்டலை சீல் வைத்தனர்.

சோனிபட் துணை ஆணையர் ஷியாம் லால் பூனியா இதுகுறித்து கூறியதாவது, மேலிடத்தில் இருந்து உத்தரவுகள் வரும் வரை இரண்டு ஹோட்டல்களும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் , கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 75 பேருக்கு எவ்வாறு பரவியது என்பதை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் உணவகங்களை சுத்தப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். டெல்லி-அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த இரண்டு ஹோட்டல்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும், மேலும் அனைத்து ஹோட்டல்களும் அனைத்து விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். வியாழக்கிழமை கணக்கின் படி , ஹரியானாவில் 1,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சோனிபட் மாவட்டத்தில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,747 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 41 ஆகவும் உயர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்