5,800 மாடுகள், 43 ஊழியர்களுடன் சென்ற கப்பல்.. நடுக்கடலில் மூழ்கிய சோகம்!
ஜப்பான் அருகே 5,800 கால்நடைகள் மற்றும் 43 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல், கடலில் மூழ்கியது.
நியூசிலாந்த் நாட்டில் இருந்து 5,800 கால்நடைகள் மற்றும் 43 ஊழியர்களுடன் “கல்ப் லைவ்ஸ்டாக்-1” என்ற கால்நடை கப்பல், சீனாவின் டங்சான் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சீனாவின் மேற்குக்கடல் பகுதியைக் கடக்கும் போது பயங்கர சூறாவளி ஏற்பட்டது. இதில் நிலைகுலைந்த அந்த கப்பல், கடலில் மூழ்கியது.
உடனே கப்பலில் இருந்த ஊழியர்கள், ஜப்பான் கடற்படைக்கு உதவி கோரி தகவல் அனுப்பினர். இந்த தகவல் கிடைத்ததை அடுத்து, கடற்படையினர் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்பொழுது கப்பல் மூழ்கிய நிலையில், கடலில் ஒருவர் மட்டும் தத்தளித்தபடி இருந்த ஒருவரை அவர்கள் மீட்டனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அவரை விசாரித்ததில், கப்பலில் அவருடன் சேர்ந்து 42 பேர் பயணித்ததாகவும், அதில் 37 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இதையடுத்து, மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கப்பலில் இருந்த, 5,800 கால்நடைகளும் உயிரிழந்திருக்க கூடும் என கருதப்படுகிறது. மேலும், அதில் பயணித்த ஊழியர்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை.