2021-ம் ஆண்டு ஜூன் வரை தடுப்பு மருந்து வருவதற்கான வாய்ப்பு குறைவு – உலக சுகாதார அமைப்பு.!

Default Image

இந்தாண்டு ஜூன் வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வருவதற்கான வாய்ப்புகள் கம்மி என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், ரஷ்யா தனது கொரோனா  தடுப்பூசியை இரண்டு மாதங்களுக்குள் சோதனைக்கு ஒப்புதல் அளித்தது என்று கூறினார். இந்த மருந்திற்கு பல நாடுகளின் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், அமெரிக்க அதிகாரிகளும் ஃபைசர் மருந்து நிறுவனமும் அக்டோபர் மாதத்திற்குள் தங்கள் தடுப்பூசி சென்றடையவுள்ளதாக என அவர்கள் கூறினர்கள்.

ஆனால், அடுத்தாண்டு (2021) நடுப்பகுதி வரை உலகளவில் பரவி உள்ள கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்பிக்கை இல்லை எனவும், தற்போது ஆராய்ச்சியில் உள்ள தடுப்பு மருந்துகள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பு எதிர்பார்க்கும் அளவிற்கு  50% கூட பூர்த்தி செய்யவில்லை என கூறினார்.

மேலும், ஏனெனில் உலகளவில் தயாரிக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட சோதனைக்கு நிறைய நேரம் எடுக்கும். இந்த சோதனைகள் மூலம் மட்டுமே கொரோனா தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிய முடியும் ஹாரிஸ் கூறினார்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் வூஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 9 மாதங்களாக உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் பல நாடுகளில் பொருளாதரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க  பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில், ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறினாலும் அதன் மீதான நம்பகத்தன்மை குறித்த கேள்வி நிருபுணர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை துரிதப்படுத்த உலக சுகாதார அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்