வீடு தேடிச் சென்று அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை -அசத்தும் பள்ளி ஆசிரியர்கள்..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழியாக பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் 1 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவியர்கள் சேர்க்கை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.எனவே சென்னை மாவட்டத்தில் உயர்நிலை ஆசிரியர்கள் பள்ளி பக்கத்தில் உள்ள பகுதிகளில் தாம்பூல தட்டுடன் கையில் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு மற்றும் இனிப்பு போன்றவற்றை எடுத்து பள்ளியில் சேர்க்க அழைப்பு விடுத்துள்ளனர்.ஆசிரியர்களின் இந்த செயல் மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.