நீர் மற்றும் ஆக்ஸிஜனின்றி துருப்பிடிக்கும் நிலா.. இதுதான் காரணம்!
நீர் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் நிலா துருப்பிடித்து உள்ளதாகவும், அதன் மேற்பரப்பில் ஹேமடைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காற்று இல்லாத சந்திரனில் துருப்பிடித்திருப்பது, விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் ஹேமடைட் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹேமடைட் என்பது ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரும்பு வடிவமாகும்.
சந்திரன் துருப்பிடித்ததற்கு நீர் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமை தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே இங்கு பூமியில் நீர் மற்றும் காற்றை உருவாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சந்திராயன் – 1 ஆர்பிட்டர் சேகரித்த தகவல்களில் சந்திரனின் மேற்பரப்பில் ஹேமடைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது மிகவும் குழப்பமானதாகவும், வினோதமானதாகவும் இருப்பதாக மனோவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஷுய்லி கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு சந்திரனின் துருவ பகுதிகள் பற்றிய நமது அறிவை மாற்றியமைக்கும் என்றும், சந்திரனின் மேற்பரப்பின் பரிணாம வளர்ச்சிக்கு பூமி ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.