தைவானில் சீன சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது.!
சீனாவிற்கு கிழக்கு பக்கத்தில் தென் சீன கடல் எல்லையில் உள்ள குட்டி தீவான தைவான் தனி நாடக உள்ளது. ஆனால், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.
இந்நிலையில், தைவானில் சீன சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோ படி போர் விமானம் கிராமப்புற குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள திறந்த பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிகிறது.
விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக விமானம் விழுந்ததா..? அல்லது அது தைவான் இராணுவத்தின் தாக்குதல் நடத்தியதா..? என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இரு தரப்பினரும் அதை உறுதிப்படுத்தவில்லை. கடந்த மாதங்களில் தைவானின் நீர் மற்றும் விமான மூலம் சீனா அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
ரஷ்யா சுகோய் ஜெட் விமானங்களை முதன்முதலில் 1991 இல் சீனாவிற்கு கொடுத்தது. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் சீனாவுக்கு சு -35 போர் விமானங்களை வழங்குவதை ரஷ்யா கடந்த 2019 இல் ஒப்பந்தத்தை முடிந்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது.!#Taiwan pic.twitter.com/HnyYkpQZmk
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 4, 2020