பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்கப்படாது – ர‌ஷியா.!

Default Image

ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ர‌ஷியா சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாஸ்கோவில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பிரதிநிதி ஜெனரல் செர்ஜி ஷோயுகு இடையே நடந்த சந்திப்பின் போது இந்தியாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டேம் என்று ரஷ்யா தெரிவித்தது.

மேலும், இந்த சந்திப்பில் இந்தியாவில் ஏ.கே .203 என்ற புதிய வகை துப்பாக்கியை தயாரிப்பது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர். பின்னர், இந்தியாவில் ஏ.கே.47-203 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தை இந்தியாவும், ரஷ்யாவும் உறுதி செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு சுமார் 770,000 ஏகே-47 203 ரக துப்பாக்கிகள் தேவை அவற்றில், 100,000 இறக்குமதி செய்யப்படும் என்றும் மீதமுள்ளவை இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ரஷ்யாவின் அரசு சார்ந்த செய்தி ஊடகம்  தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்