ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
ரஷ்யா சென்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்குடன் ஆலோசனை நடத்தினார்.
ரஷ்யா தலைநகர், மாஸ்கோவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றடைந்தார்.
மாஸ்கோ சென்றுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்குடன் ஆலோசனை நடத்தினார். அதுமட்டுமின்றி, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த சீன பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பேங்க் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்தியா-சீனா இடையே நடக்கும் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவது குறித்த எந்தொரு அங்கீகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை எனவும், இன்று மாலை இருவரும் சந்திக்கவுள்ளதாகவும், அந்த கூட்டத்தில் லடாக் எல்லை விவகாரம் குறித்து பேசப்படும் எனவும் தகவல்கள் வெளியானது.
Raksha Mantri Shri @rajnathsingh at the Russian MoD where had a bilateral meeting with his counterpart General Sergey Shoigu.@IndEmbMoscow pic.twitter.com/H7zGkM10dR
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) September 4, 2020