‘பொன்னியின் செல்வன் ‘படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்திற்குள் இலங்கையில் வைத்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது . ஊரடங்கிற்கு முன்பு இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் புதுவையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் மற்றும் நிழல்கள் ரவி இணைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
சமீபத்தில் படப்பிடிப்புகள் நடத்த அரசு கட்டுபாட்டுகளுடன் கூடிய அனுமதி அளித்ததை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்திற்குள் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், இலங்கையில் வைத்து சில காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும், அங்கு கொரோனா பாதிப்பு கட்டுபாட்டுக்குள் இருப்பதால் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், அதன் பின்னர் தான் சென்னையில் ஷூட்டிங்கை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025