உள்நாட்டு விமானங்களை 60% வரை இயக்க அனுமதி.!
உள்நாட்டு விமான சேவையில் 60% விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, நிறுத்தப்பட்ட விமான சேவை பின்னர், ஜூன்-25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையை இயங்க மத்திய அரசு அறிவித்தது.
அப்போது, 45% விமான சேவை மட்டுமே இயங்க அனுமதி வழங்கிய நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு நான்காம் கட்ட தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவையில் 60 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.