“சுங்கச்சாவடி கட்டண உயர்வு.. வணிகர் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்”- விக்கிரமராஜா!
சுங்கச்சாவடி கட்டண உயர்வு, விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகை செய்யும் எனவும், இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக வணிகர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், சுங்கச்சாவடி கட்டண உயர்வு, விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகை செய்யும் என கூறிய அவர், இதனை கண்டித்து வணிகர் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், கொரோனா பரவும் காலத்தில், வங்கிகளில் கடன்களை செலுத்த வலியுத்துவதும், மிரட்டுவதும், கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.