சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு.!
சென்னையில் வரும் திங்கள் முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ள சென்னை மெட்ரோ ரயில்கள், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு தீவிர சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது.
மேலும், மெட்ரோ நிர்வாகம் செப்டம்பர் 7-ம் தேதி மெட்ரோ ரயில் இயங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
- அதில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் .
- அலுவலகம் செல்லும் நேரமான காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயில் நிறுத்தம் நேரமானது 20 நொடிகளில் இருந்து 50 நொடிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.