ஒரே நாளில் உலகளவில் 2.86 லட்சமாக அதிகரித்த கொரோனா பாதிப்பு!
உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.86 லட்சம் பேர் புதிதாக கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்குதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், உலகளவில் இதுவரை 26,177,603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 867,347 பேர் உயிரிழந்துள்ளனர், 18,442,305 பேர் குணமாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 286,369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,316 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,868,054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.