இன்று முதல் பெய்ஜிங்கிலிருந்து சர்வதேச விமானப்போக்குவரத்திற்கு அனுமதி.!
இன்று முதல் பெய்ஜிங்கிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 23 -ம் தேதி தடை விதித்த பின்னர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து முதல் முறையாக நேரடி சர்வதேச விமானங்களை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, கிரீஸ், டென்மார்க், ஆஸ்திரியா, சுவீடன் மற்றும் கனடாவை இணைக்கும் விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அனைத்து பயணிகளும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.