அதிகாலையில் ஹேக் செய்யப்பட்ட மோடியின் ட்விட்டர் கணக்கு.!

Default Image

பிரதமர் நரேந்திர மோடியின்  ட்விட்டர் கணக்கு  ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இன்று அதிகாலை 3:15 மணியளவில் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மோடியின் இந்த ட்விட்டர் கணக்கில் 2.5 மில்லியன் பயனாளர்கள் பின்தொடர்கின்றனர்.

ஹேக் செய்யப்பட்ட மோடியின் ட்விட்டர்  பக்கத்தில் ” கொரோனா வைரஸ் காரணமாக  பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு பிட்காயின் வழியாக பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ட்விட் செய்யப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் குறித்து டிட்டர் விசாரணையைத் தொடங்கினார். ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிற கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கணக்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த ஜூலை மாதம், முக்கிய நபர்களின் பல கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் எலோன் மஸ்க் உள்ளிட்ட ட்விட்டர் கணக்கு  ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு  நீங்கள்  1,000 டாலர் அனுப்பினால்  நான் 2,000 டாலர் திருப்பி தருவதாகவும், அடுத்த 30 நிமிடங்களுக்கு மட்டுமே இதைச் செய்யுங்கள் செய்ய வேண்டும் என  ட்விட் செய்யப்பட்டு இருந்தது. இதை பார்த்த பலர் பணத்தை அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்